துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை: திஷா பதானி தந்தை விளக்கம்

Date:

உ.பி. பரெய்​லி​யில் இந்தி நடிகை திஷா பதானி​யின் வீடு உள்​ளது. நேற்று முன்​தினம் 2 மர்ம நபர்​கள், பதானி​யின் வீட்​டின் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பினர். இதில் வீட்​டில் இருந்த யாருக்​கும் பாதிப்பு ஏற்​பட​வில்​லை.

இந்த தாக்​குதலுக்கு ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் கும்பல் பொறுப்​பேற்​றுள்​ளது. ஆன்​மிக தலை​வர்​கள் குறித்து அவதூறு கருத்து தெரி​வித்​ததற்​காக இந்​தத் தாக்​குதலை நடத்​தி​ய​தாக அந்த கும்பல் தெரி​வித்​திருந்​தது.

இந்த சம்​பவம் குறித்து திஷா பதானி​யின் தந்தை ஜெக​திஷ் சிங் பதானி கூறும்​போது, “எனது மூத்த மகள் குஷ்பு பதானி​யின் (திஷா பதானி சகோ​தரி) கருத்து தவறாக புரிந்​து​கொள்​ளப்​பட்​டுள்​ளது. நாங்​கள் சனாதனிகள். சாதுக்​களை நாங்​கள் மதிக்​கிறோம். இந்த விவ​காரத்​தில் எங்​களுக்கு எதி​ராக சதி நடந்​துள்​ளது. துப்​பாக்​கி​யால் சுடும் அளவுக்கு என் மகள் எது​வும் அநாகரி​க​மாக பேச​வில்​லை. அனிருதா ஆச்​சார்யா பெண்​கள் குறித்து ஒரு கருத்து தெரி​வித்​தார். என் மகள் ஒரு கருத்து தெரி​வித்​தார். அனை​வருக்​கும் கருத்து சுதந்​திரம் உள்​ளது’’ என்​றார்.

திஷா பதானி​யின் சகோ​தரி குஷ்பு பதானி, கடந்த ஜூலை மாதம், அனிருதா ஆச்​சார்யா பெண்​களை வெறுக்​கும் வகை​யில் கருத்து தெரி​வித்​திருப்​ப​தாக குற்​றம் சாட்​டி​யிருந்​தார். ஆனால் இந்​தக் கருத்து ஆன்​மிக தலை​வர் பிரே​மானந்த் ஜி மகராஜை அவம​திக்​கும் வகை​யில் இருப்​ப​தாக செய்தி வெளி​யானது. இதற்கு குஷ்பு உடனடி​யாக மறுப்பு தெரி​வித்​திருந்​தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்