விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்

Date:

தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​ கூறி பாலியல் ரீதி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகரும், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் மீது நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் பாலியல் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் போலீ​ஸார் சீமான் மீது பாலியல் துன்​புறுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​திருந்​தனர். இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, கடந்த பிப்​.17 அன்று சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது, என மறுப்பு தெரி​வித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுக்கு தடைகோரி சீமான் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி பி.​வி.​நாகரத்னா தலை​மையி​லான அமர்​வு, சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்​கும், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுக்​கும் இடைக்​கால தடை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்​தர​விட்​டிருந்​தது. விஜயலட்​சுமிக்கு உரிய இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பாக இருதரப்​பிலும் சமரச​மாக பேசி முடி​வெடுக்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டிருந்​தது. இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது இருதரப்​பிலும் பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி.நாகரத்​னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது விஜயலட்​சுமி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஷாதான் ஃபராஸத் ஆஜராகி, இந்த விவ​காரத்​தில் சமரசத்​துக்கு வாய்ப்​பில்லை என்​றும், விஜயலட்​சுமி குறித்​தும் சீமான் ஏற்​கெனவே அவதூறாகப் பேசி​யுள்​ளார். இதில் மனமுடைந்த அவர் கடந்த 2020-ம் ஆண்டு தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இரு​வரும் பரஸ்பர சம்​மதத்​துடன்​தான் பாலியல் உறவில் இருந்​துள்​ளனர் என வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘இரு​வரும் என்ன செய்​தார்​கள் என்​பது அவர்​களுக்கு மட்​டும் தான் தெரி​யும். தெரி​யாது எனச்​சொல்ல அவர்​கள் ஒன்​றும் சின்ன குழந்​தைகள் அல்ல. இந்த விவ​காரத்​தில் இருந்து விடு​பட்டு இரு​வரும் சுதந்​திர​மான, நிம்​ம​தி​யான வாழ்க்​கையை தொடர வேண்​டும் என விரும்​பு​கிறோம்.

எதிர்​காலத்​தில் விஜயலட்​சுமிக்கு எந்த தொந்​தர​வும் கொடுக்க மாட்​டேன் என்​றும், விஜயலட்​சுமி மீதான அவதூறு கருத்​துக்​களை​யும், குற்​றச்​சாட்​டு​களை​யும் வாபஸ் பெற்​றுக் கொள்​கிறேன் என்​றும், இந்த விவ​காரத்​தில் மன்​னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்​கல் செய்ய வேண்​டும். அப்​படி செய்​தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்​வது குறித்து யோசிப்​போம். தவறும்​பட்​சத்​தில் சீமான் தாக்​கல் செய்​துள்ள இந்த மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படும்’’ எனக்​கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு வி​சா​ரணைக்கு வி​திக்​கப்​பட்​ட இடைக்​காலத்​ தடையை வரும்​ செப்​.24 வரை நீட்​டித்​தும்​, சீமானுக்​கு கெடு வி​தித்​தும்​ உத்​தரவிட்​டுள்​ளனர்​.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்