கொழும்பு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 22, 17 வயதான இருவர் கைது!

Date:

கொழும்பில் நடந்த இரு வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஓகஸ்ட் 24 ஆம் திகதி பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள மாவத்தையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தெஹிவளை, அத்திடியவில் 22 வயது முச்சக்கர வண்டி ஓட்டுநரை மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்தது. களுபோவிலைச் சேர்ந்த சந்தேக நபர், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, செப்டம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், விசேட அதிரப்படைபுலனாய்வுப் பிரிவினர், ராகமவில் உள்ள லிண்டன் மைதானத்திற்கு அருகில் 17 வயது சிறுவனை கைது செய்தனர். ஓகஸ்ட் 22 ஆம் திகதி பொரல்ல சீவாலியாபுர துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக நபர் உதவியதாகவும், அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர். விசாரணைக்காக அவர் ராகம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்