சமோசா வாங்கி வராத கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மனைவி மீது வழக்கு

Date:

கணவர் சமோசா வாங்கி வராத​தால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு அடி தடி​யில் முடிவடைந்​தது. இது தொடர்​பாக மனைவி மற்றும் அவரது குடும்​பத்​தார் மீது உத்தர பிரதேச போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகு​தி​யில் உள்ள அனந்​த்பூரைச் சேர்ந்​தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்​கீ​தா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்​படி சங்​கீதா கூறி​யுள்​ளார்.

ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்​பி​யுள்​ளார். சமோசா எங்கே என மனைவி கேட்​ட​போது, வாங்க மறந்து விட்​டேன் என சிவம் குமார் கூறி​யுள்​ளார். இதனால் இரு​வர் இடையே வாய்த் தகராறு ஏற்​பட்​டது. மறு​நாள் தனது குடும்​பத்​தினரை வரவழைத்த சங்​கீ​தா, சமோசா விஷ​யத்தை கூறி, தான் சொல்​வதை கணவர் கேட்​ப​தில்லை என புகார் கூறி​யுள்​ளார்.

இது குறித்து சிவம் குமாரிடம் சங்​கீ​தா​வின் பெற்​றோர் கேள்வி எழுப்​பினர். இதற்கு சிவம் குமார் கோபத்​தில் பதில் அளித்​த​தால், வாய்த் தகராறு ஏற்​பட்டு அடிதடி​யாக மாறியது. சங்​கீ​தா, அவரது தாய் உஷா, தந்தை ரம்​லாடைட், மாமா ராமோதர் ஆகியோர் சிவம் குமார் மீது தாக்​குதல் நடத்​தினர்.

இச்​சம்​பவம் குறித்து சிவம் குமாரின் தாய் போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து சங்​கீதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். காயம் அடைந்த சிவம் குமார் மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக கொண்டு செல்​லப்​பட்​டார். சமோசா பிரச்​சினை​யால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு, அடிதடி​யில் முடிந்​த​தாக பிலிப்​பித் காவல்​துறை துணை கண்​காணிப்​பாளர்​ அபிஷேக்​ யாதவ்​ தெரி​வித்​தா​ர்​.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்