இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
பொதுஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி கைதுசெய்யப்பட்டுள்ளார். நிஷாந்த உலுகேதென்னவை பதவிக்காலத்தில் குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார். இளைஞன் காணாமல் போண குற்றச்சாட்டடில் நிஷாந்த உலுகேதென்னவை இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



