மல்லாவி வர்த்தகர்களும் கதவடைப்புக்கு எதிர்ப்பு!

Date:

முத்துஐயன்கட்டு இராணுவ முகாம் சிப்பாயொருவருக்கு கஞ்சா, கசிப்பு கொடுத்து, முகாமுக்குள் இரகசியமாக நுழைந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர் குழுவொன்று, இராணுவத்தால் பிடித்து தாக்கப்பட்ட போது, தப்பியோடினர். அவர்களில் ஒருவர் பின்னர் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இராணுவத்தினரால் அந்த இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டு, கதவடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், இந்த கதவடைப்பு போராட்ட அழைப்புக்கு பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடக்கு கிழக்கின் அனேக இடங்கள் நாளை வழக்கம் போல இயங்குமென தெரிகிறது.

இந்த நிலையில், முல்லைத்தீவு வர்த்தகர் சங்கத்தின் தலைவர் நாளைய கதவடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததாக ஒரு தகவல் பரவியது.

எனினும், மல்லாவி வர்த்தகர்கள் பலர் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாளை வர்த்தக நிலையங்கள் திறக்கும் என அறிவித்துள்ளனர். இந்த முடிவை எடுக்கும் போது வர்த்தகர்களுடன் கலந்துரையாடவில்லையென்றும், தாம் வர்த்தகர் சங்க தலைவரை தொடர்பு கொண்டபோது, அவ்வாறான முடிவெடுக்கவில்லையென்றும், நாளை வழக்கம் போல கடைகளை திறவுங்கள் என தெரிவித்ததாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்