திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை கேட்டு தமிழ் மக்கள் ஏமாற வேண்டாம்!

Date:

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுபடுத்தப்பட்ட கதைகள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு, ஜீவநகர் இராணுவ முகாமிலிருந்த சிப்பாய் ஒருவருக்கு கஞ்சா, கசிப்பு கொடுத்துவிட்டு, முகாமிற்குள் இரகசியமாக நுழைந்து திருட்டில் ஈடுபட்ட குழுவொன்று இராணுவத்திடம் சிக்கி தாக்கப்பட்ட போது, தப்பியோடிய இளைஞன் ஒருவர் முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் நடந்த போது அந்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியானது.

இராணுவத்தினர் அடித்து அவர் இறக்கவில்லையென்பதும் பிரேத பரிசோதனையில் உறுதியானது.

எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தகவலை திரித்து, இராணுவத்தினரால் இளைஞன் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டு, கதவடைப்புக்கு அழைப்பு விடுத்தார். அவர் தனது அரசியல் இருப்புக்காக கதவடைப்புக்கு அழைப்பு விடுத்ததாக கருதப்படுகிறது.

இந்த பின்னணியில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

“சில அரசியல் குழுக்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலமும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதன் மூலமும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. பொதுமக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாகச் செயல்படுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்