பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு எனவே நாம் அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட
அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது கட்சியின் அரசியல் எழுச்சிளை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனவே இச் சட்டத்தை பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டதை நீக்குவதே
எமது அரசின் நோக்கம் எனத் தெரிவித்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் இன்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ்
நிலைகள் தொடர்ந்து நிலவுகிறது இன்றும் (17) முல்லைத்தீவு ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் இந்த நிலைமை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்