வாகன விபத்தில் சிறுமி பலி

Date:

சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தம்புள்ளை, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே என்ற சிறுமி ஆவார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர், அவரது மகளை முன் இருக்கையில் வைத்துக்கொண்டு பயணித்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒரு காரின் பின்புறத்தில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளின் முன் இருக்கையில் இருந்த மகள் வீதியில் தூக்கி வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்துக்குள்ளான காரும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.

மகளின் தாய் சிகிரியா பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிவதாகவும், அவரை வேலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

அவர் தனது மகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் சென்ற கார் திடீரென பிரதான வீதியில் நின்றதாகவும், மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதியதாகவும் உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானிடம் இன்றும் 21,22 சதவீத ஏவுகணை இருக்கலாம்: ட்ரம்ப்

ஈரானிடம் இன்னும் “21, 22 சதவிகித” ஏவுகணைகள் எஞ்சியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

பாடகரை விடுவிக்கக்கோரி போராட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

விலாசம் கேட்பது போல நடித்து வில்லங்கம்: சிறுமி கடத்தப்பட்டு சீரழிப்பு; புடவைக்கடைக்காரர்கள் கைவரிசை!

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்