மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் ரயில் மோதி பலி!

Date:

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (10) இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த நாகேந்திரன் கரிகரராஜ் (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, நேற்றிரவு தண்டவாளத்தில் நின்று மனைவியுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, சடலத்தை மீட்டு ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர், ரயில் கொழும்பு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் ஆறு விடுதிகளில் அதிரடி சோதனை – 20 பெண்கள் கைது!

கொழும்பு, வெலிக்கடை பகுதியில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத...

யானைகள் வழிமறித்ததால் வைத்தியசாலை கொண்டுசெல்ல தாமதம்: பாம்பு தீண்டிய யுவதி மரணம்!

பாம்பு தீண்டிய யுவதியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, யானைகள் இடைமறித்ததால்...

இலங்கையில் நிலநடுக்க அபாயம்? மத்திய மலைநாடு தொடர்பில் பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இத்தகைய புவியியல் மாற்றங்கள் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்