புங்குடுதீவில் ஒருவர் வெட்டிக்கொலை

Date:

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (10) இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

பேருந்து உரிமையாளரான அகிலன் என்பவரே கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்த போது, ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், வாள்களால் அவரை கொடூரமாக வெட்டினர். அதை தடுக்க வந்த அயல்வீட்டில் வசிக்கும் உறவினரைான இளைஞனும், இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அகிலன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் தகவலின்படி, அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர். அந்த நபர், உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே சிலமுறை கொலை மிரட்டல் விடுத்து, அது குறித்து பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தனது உறவினரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர், அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்