சட்டவிரோதமாக வாகனம் ஒன்று சேர்க்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை மதுகம நீதிவான் நீதிமன்றம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
இதற்கிடையில், அதே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் கடத்தப்பட்டு மோசடியாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் உயர் ரக ஜீப் தொடர்பாக இந்த வழக்குகள் நடந்து வருகிறது.
இந்த வாகனம் ஆரம்பத்தில் அபேகுணவர்தனவின் மகள் மெலனியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் 2024 ஒக்டோபரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்கப்பட்டது.
இந்த வாகனம் ரூ. 45 மில்லியனுக்கு வாங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதான கூறிய போதிலும், அது ரூ. 20 மில்லியனுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர், இது ஆவண மோசடி மற்றும் வரி ஏய்ப்புக்கான சந்தேகங்களைத் தூண்டியது.




