செம்மணியில் போராட்டம்

Date:

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் மற்றும் உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம் செம்மணியில் இன்று காலை நடைபெற்றது.

இலங்கை அரசே படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின் நீதியை கோருகின்றோம் எனும் தொனிப்பொருளில் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்பொழுது நீதி வேண்டும் நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும், இது மண்ணல்ல புதை உண்மை அதை தோண்டி காட்டுவோம் , ஐநா செவி கொடு, ஜனாதிபதி கண்விழி, மனித உரிமையை பாதுகாப்பீர், புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள் ,விசாரணையை துரிதபடுத்து ,செம்மணிக்கா ஒரு நீதி பட்டலந்தவுக்கு ஒரு நீதியா ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர் பொதுமக்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மதகுரு தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழி பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிசார் போராட்டகளத்தில் குவிக்கப்பட்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்