புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா?: அரசின் திட்டம் இதுதான்!

Date:

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலமைப்பரிசில் நடத்துவது குறித்து 2028 ஆம் ஆண்டில் பரிசீலிக்க ஒரு குழு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைய (20) பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பரீட்சை நடத்துவது மற்றும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் வினாத்தாள்களை உருவாக்குவது தொடர்பாகவும் பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை படிப்படியாக நீக்கவும், புலமைப்பரிசில் காரணமாக மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்