சியம்பலாந்துவவிலிருந்து பெல்வத்த சீனித் தொழிற்சாலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற லொறி, மொனராகலை கும்புக்கன் சந்திக்கு அருகில் கவிழ்ந்துள்ளது.
எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கரும்பு சரக்கு ஒரு பக்கமாக சரிந்ததையடுத்து, லொறி கவிழ்ந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் லொறியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இலேசான காயமடைந்துள்ளனர்.



