இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டு மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட பொன் சிவகுமாரனின் சிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினர் இன்று காலை உணர்வுபூர்வமாக ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரைத் தியாகம் செய்த முதல் வித்து பொன் சிவனுமாரன் 51 ஆவது நினைவு தினம் தமிழர் தயாகத்தில் உணர்வுபூர்வமாக இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
உரும்பிராயில் பொன் விவகுமாரனின் சிலை அமையப்பெற்றுள்ளது.
இச் சிலை யுத்தகாலத்தில் இராணுவத்தினரால் பல தடவைகள் சிவகுமாரனின் நினைவுச் சிலை இடித்து இழிக்கப்பட்டது. இவ்வாறாக இடித்து அழிக்கப்பட்ட சிலைகளில் 1975 ஆம் ஆண்டு இதே தினத்தில் சிறை மீண்ட இளைஞன் முத்துக் குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியவாதிகளால் அமைக்கப்பட்ட இச் சிலை இராணுவத்தினரால் இடித்து இழிக்கப்பட்டது. இவ்வாறாக இடித்து இழிக்கப்பட்ட சிலை மற்றம் நினைவு கல் உள்ளிட்டவை உரும்பிராய் சந்தை வளாகத்தில் மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணப்பட்ட நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்தபோது உரும்பிராய் தியாகராஜா நிரோஸினால் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச் சிலையிலேயே இன்னு காலை வலிகாமம் கிழக்கப் பிரதேச சபைத்தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், குயிலன், தனுபன் ஆகியோர் பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




