வாள்வெட்டுக்குள்ளாகி இறந்த இளைஞனுக்கு நீதி கோரி பொது மக்கள் போராட்டம்

Date:

கடந்த 31ம் திகதி கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தம்பிராய் குளத்திற்கு அண்மையில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த. பூநகரி செம்மன் குன்று பகுதியைச்சேர்ந்த கந்தசாமி பிரணவன் அவர்களின் இறுதிக்கிரியை இன்று நடைபெற்ற நிலையில் கொலைக்கு நீதி வேண்டி பிரதேச மக்களினால் இறுதி ஊர்வலத்தின் போது பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன் போது குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜரையும் கையளித்தனர். வாள் வெட்டுக்குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள், உயிரை பறித்தவரை ஒரு போதும் மண்ணிக்காதே போதையை கூண்டோடு ஒழிப்போம் போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேர் பூநகரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்