தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணரின் அலட்சியத்தினால் நோயாளி மரணம் என குற்றச்சாட்டு: நீதிமன்றத்தை நாடிய கணவன்!

Date:

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம், கச்சேரி நல்லூர் வீதியைச் சேர்ந்த, 45 வயதுடைய துஷ்யந்தன் நிரோஷா என்ற பெண்ணிற்கு பித்தப்பை தொடர்புடைய சத்திரசிகிச்சையொன்று, சத்திரசிகிச்சை நிபுணர் கோகுலனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இரண்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பயனற்ற நிலையில் அப்பெண் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (27.05.2025) பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவனால் யாழ் நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட எழுத்துமூல முறைப்பாட்டைத் தொடர்ந்து, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு விரைந்த பொலீஸார் அங்கு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கணவனால் நீதிமன்றிற்கு வழங்கப்பட்ட எழுத்து மூலக் குற்றச்சாட்டில், மிகச் சாதாரணமானதோர் சத்திரசிகிச்சை எனக்கூறி நன்கு ஆரோக்கியமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவி, சத்திரசிகிச்சை நிபுணர் கோகிலனின் அலட்சியத்தினால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவத்தவறின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் நீதிமன்றைக் கோரியுள்ளார்.

இது தொடர்பிலான மரணவிசாரணை அறிக்கை முழுமையாக வெளிவராத நிலையில், கமரா மூலமாக (laparoscope) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் பித்தப்பைக்கு குருதியை வழங்கும் பிரதான இரத்த நாடி, பித்தப்பை குழாய் சத்திரசிகிச்சையின் போது வைத்திய நிபுணரால் தவறுதலாக வெட்டப்பட்டமையும், அதனை அவதானிக்காது சத்திரசிகிச்சையை முடிவுறுத்தி நோயாளியை விடுதிக்கு அனுப்பிய நிலையில் ஏற்பட்ட பாரிய இரத்த இழப்பும்,பித்தம் வயிற்றினுள் கசிந்தமையுமே உயிரிழப்பிற்கு காரணமென, உள்ளக வைத்திய வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க, குற்றச்சாட்டிற்குள்ளாகியுள்ள வைத்திய நிபுணர் கோகுலன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தேவநேசன் ஆகியோர் இணைந்து, தம்மை பல்வேறு விதங்களில் துன்புறுத்துவதாகவும், தமது கடைமைகளிற்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட சில பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சக வைத்திய நிபுணர்கள், வடக்கு மாகாணசபை மற்றும் சுகாதார அமைச்சின் அனைத்து மட்டங்களிற்கும் எழுத்து மூலமாக அளித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் பகலில் இணுவில், யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளில் மக்களிற்கு சேவையாற்றுவதால் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு இரவிலேயே பெரும்பாலும் வருகை தருவதுண்டு. சில வாரங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சி அரசியல்வாதியின் மனைவி வீதி விபத்தில் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இவரால் அந்த நோயாளியும் இரண்டு நாட்களாக பார்வையிடப்படவில்லை. இது சம்பந்தமாக வைத்திய அத்தியசகர் தேவநேசனுக்கு சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களும், சக ஊழியர்களும் மக்களும் முறைப்பாடு செய்த போதிலும் அவர் எது விதமான நடவடிக்கைகளும் எடுத்திருக்கவில்லை.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவும், வைத்திய நிபுணர் கோகுலன் மற்றும் வைத்திய அத்தியட்சகர் தேவநேசனிற்கு ஆதரவாக, தனக்கு நேரடித் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தன்னை கடுமையாக அச்சுறுத்தியதாக மற்றொரு வைத்திய நிபுணர் எழுத்து மூல முறைப்பாடுகளை தெல்லிப்பளை பொலீஸ் நிலையம் மற்றும் சுகாதார அமைச்சிற்கு வழங்கியுள்ளார். இதனை பகிரங்க முகநூல் அறிவிப்புக்கள் பலவற்றினூடாக பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவும் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெறுவதாக வைத்தியர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அந்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகரும் அவர் சகாக்களும் தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்