கிளிநொச்சியில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

Date:

கிளிநொச்சியில் புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை இயங்கிய
போதும் சமிக்கை ஒலியை பொருப்படுத்தாமல் புகையிரத கடவையை கடக்க முயன்றவர்
விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தினால் ரயில் சேவையும் சில மணி நேரம்
பாதிக்கப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறிவியல் நகர் செல்லும் வீதியான
பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில்
பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணித்த அதிசொகுசு புகையிரதம் இன்று 25.05.2025 நண்பகல் 12.00
மோதியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னழகு அனுசன் ராஜ்
என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலியான சடலத்தை உறவினர்கள் புகையிரதத்தில் எடுத்து செல்ல
மறுப்பு தெரிவித்த மையால் விபத்து இடம்பெற்ற இடத்தில் சுமார் 30
நிமிடங்கள் வரை புகையிரதம் தரித்து நின்றதுடன், பொலிசாரும்
உறவினர்களும் புகையிரத ஊழியர்கள் தொலைபேசியில் உரையாடிய பின் புகையிரத
ஊழியர்கள், பொலிஸாரின் அனுமதியுடன் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சடலத்தை
கையளித்த பின்னர் புகையிரதம் யாழ்.நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது...

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...

அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்