இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மனோஜ் நடேஷன அமரசிங்க மற்றும் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) தனுஜா அரியரத்ன ஆகியோர் ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, அலுவலக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஊழியர்கள் கூ சப்தமெழுப்பி அவர்களை அலுவலகத்திலிருந்து விரட்டும் கணொளிகள் சமூக ஊடகஙகளில் பரவி வருகிறதுஇ
தொலைக்காட்சி நிலையத்தின் உள் வட்டாரங்களின் தகவலின்படி, இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் ஊழியர்களுடன் கொண்டிருந்த தொடர் மோதல்களின் விளைவாக நிகழ்ந்தது.
ஊழியர்களை அடிக்கடி திட்டுவது மற்றும் அவர்களை இழிவுபடுத்துவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் தனுஜா அரியரத்னவுடன் பல வாக்குவாதங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முந்தைய தலைவர் சேனேஷ் பண்டார திசாநாயக்கவின் காலத்தில் அவர் நியமிக்கப்பட்டார்.
தொலைக்காட்சி நிலையத்தின் பணிப்பாளர் தொடர்ந்து அவரைப் பாதுகாத்ததால், ஊழியர்கள் அவர் மீது கோபமடைந்தனர்.
இந்த நிலைமை தொடர்பாக பணிப்பாளர் மனோஜ் நடேஷனவுடன் ஊழியர்கள் கலந்துரையாடக் கோரியதை அடுத்து இன்று ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஊழியர்கள் ஒன்றுபட்டனர். இதையடுத்து பணிப்பாளரும், நிர்வாகப் பிரிவின் பொறுப்பான துணைப்பணிப்பாளரும் அலுவலக வளாகத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்கள் வெளியேறும் போது ஊழியர்கள் ஒன்றுகூடி கூ சப்தமெழுப்பினர்.



