கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் – மோகன்லாலின் ‘துடரும்’ சாதனை!

Date:

கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது ‘துடரும்’. ஏப்ரல் 25ஆம் திகதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது.

தற்போது கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதுவரை கேரளாவில் மட்டும் ரூ.90 கோடி வசூலைக் கடந்திருக்கிறது ‘துடரும்’. ஒரே ஆண்டில் ’எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ என்ற இரண்டு மாபெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் மோகன்லால். மேலும், உலகளவில் ரூ.200 கோடி வசூலை ‘துடரும்’ கடந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

கேரளா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் குறையவே இல்லை. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பல மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. இன்றைய வசூலை கணக்கிட்டால் கண்டிப்பாக கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை நிகழ்த்த இருக்கிறது ‘துடரும்’.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்