டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு: பிசிசிஐ-யிடம் விராட் கோலி ‘பகிர்ந்த’ விருப்பம்!

Date:

இங்கிலாந்து தொடர் வரவிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். தான் ஓய்வு பெற விரும்புவதாக ஒரு மாதம் முன்பே பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்து விட்டதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பவில்லை என்பதில் கோலி தீவிரமாக இருந்தால் அவரது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று நாம் கூறிவிடலாம். 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 68 டெஸ்ட் போட்டிகளில் கப்டனாக இருந்தார். இதில் 9,230 ரன்களை 46.85 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

கடைசியாக போர்டர் கவாஸ்கர் கிண்ண தொடரில் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றியில் கோலி 100 ரன்கள் எடுத்தார். ஜூலை 2023-க்குப் பிறகு கோலி டெஸ்ட்டில் எடுத்த முதல் சதமாக அது அமைந்தது. 2019 இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக புனேவில் 254 ரன்கள் எடுத்ததுதான் அவரது கரியர் பெஸ்ட் ஸ்கோர். கடைசி 2 வருடங்களாக அவரது சராசரி 32-ஐ த் தாண்டவில்லை.

இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் அனுபவம் இந்திய அணிக்குக் கைகொடுக்கும் என்று அவரை அணியில் தக்க வைக்க முடிவு செய்துள்ளனர், ஆனால், அவரோ ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்து விட்டார். கடைசி பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ+ பிரிவில் கோலி, ரோஹித் இருவருமே இருந்தனர். ரோஹித் ஏற்கெனவே ரிட்டையர் ஆகிவிட்டார், அஸ்வினும் ஓய்வு பெற்று விட்டார். கம்பீருக்கு இங்கிலாந்து அனுபவம் போதாது, எனவே விராட் கோலி அவசியம் தேவை என்று தேர்வுக்குழுவினர் உணர்கின்றனர்.

68 டெஸ்ட்களில் கப்டனாக இருந்த கோலியின் தலைமையில் இந்திய அணி 40 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 போட்டிகளில் மட்டும்தான் தோற்றுள்ளார். தோனி 60-ல் 27 வென்றுள்ளார், கங்குலி 49-ல் 21-ல் வென்றுள்ளார்.

கோலி கப்டனாக உலக அளவில் 4வது சிறந்த கேப்டனாக கிரேம் ஸ்மித், ரிக்கி பொண்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன்

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன் 11.08.2026 | அவுஸ்திரேலியா திருமதி பத்மதேவி தேவாராஜன்...

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்