மட்டக்களப்பு மாநகர முதல்வராக சிவம் பாக்கியத்தை நியமிக்க தீர்மானம்!

Date:

மட்டக்களப்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

மாநகரசபைக்கு தெரிவான இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க மேலும் 2 ஆசனங்கள் தேவையாக உள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 உறுப்பினர்களின் ஆதரவை பெறலாம்.

இதேவேளை, சுயேச்சையாக களமிறங்கிய பந்து அணியுடனும் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல் இரண்டு வருடம் சிவம் பாக்கியமும், அடுத்த இரு வருடம் துரைசிங்கம் மதனும் நியமிக்கப்படுவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.

பிரதி முதல்வராக முதல் இருவருடம் டினேஷ், அடுத்த இருவருடம் ரகுநாதன் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்