யாழில் பிரதமர் கோயிலுக்கு வந்ததால் பக்தர்களுக்கு பெரும் கெடுபிடி

Date:

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார்.

பிரதமர் ஆலயத்திற்கு வருகை தர விருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்ததிருந்தனர்.

இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஆலய தர்மகார்த்த சபையினர் முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் ஒரளவு தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்