29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
கிழக்கு

தாயை கொன்ற மகன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் நாவலடியில் தனது தாய் மீது மகன் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று (06) கேணி நகர் வீதி நாவலடியில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பிச்சைப்பிள்ளை ஆசைமுத்து என்ற 71 வயதுடைய மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

தமது மனைவியை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக அருகில் காணப்பட்ட மரச் சட்டத்தினால் தாயாரை தாக்கியதில் இவ் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தாய் இறந்ததை அறிந்தவர் அருகில் உள்ளோரை அழைத்து சம்பவம் பற்றி தெரியப்படுத்தியதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிசார் வருகை தந்து தடயங்களை அறிக்கையிட்டனர்.

வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சட்ட வைத்திய அறிக்கைக்காக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

கொலையை மேற்கொண்டதாக கூறப்படும் 35 வயதுடைய மகன் வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-க.ருத்திரன்-

இதையும் படியுங்கள்

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!