கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறைச்சாலை பேருந்தில் பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27 ஆம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.