28.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த நிபந்தனை மோட்டார் சைக்கிள்கள், கை இழுவை இயந்திரங்கள் (hand tractors), இழுவை இயந்திரங்கள் (tractors) மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் சேவைகள் அனைத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இது புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று திருத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், இழுவை இயந்திரங்கள் மற்றும் கை இழுவை இயந்திரங்களின் பதிவு அல்லது உரிமை மாற்றங்களுக்கு TIN தேவையில்லை என்று திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாற்றம், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதன்மூலம், நிதி பொறுப்புணர்வை வலுப்படுத்தவும், நிர்வாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும் நோக்கமாக உள்ளது.

TIN எண்ணைப் பெறாத வாகன உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள், ஏப்ரல் 15க்கு முன் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகமான நாரஹென்பிட்டவில் உள்ள பதிவுப் பிரிவை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் நடக்காது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

Pagetamil

ஏப்ரல் 21 இன் முன் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் பலர் அம்பலமாவார்கள்: ஜனாதிபதி அறிவிப்பு!

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!