உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் தாக்கல் செய்ய மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட 20 வரையான தரப்புக்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மனுக்கள் பிறப்பு சான்றிதழ் தொடர்புடைய மயக்கம் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வரும் ஞாயிறு அன்று தேர்தல் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தொடர்புடைய கட்சிகள் கூடி முடிவொன்றை எட்டு மாறு மூவர் அடங்கிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் இந்த வழக்கு எதிர்வரும் செவ்வாய் அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1