25.5 C
Jaffna
March 27, 2025
Pagetamil
இலங்கை

மாதகல் கடலில் இளைஞன் பலி

மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று மாதகல் கடற்கரையில் உணவு சமைத்து உண்பதற்காக நேற்று (21) காலை 11 மணியளவில் சென்று, பிற்பகல் 3.15 மணியளவில் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கோயில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியைச் சேர்ந்த பிரேமானந்த் சாருஜன் எனும் 20 வயதான இளைஞர், கடலில் குளிக்க முயன்றபோது கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர், பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மாலை 5.30 மணியளவில் அவரது உடல் மீட்கப்பட்டது.

உயிரிழந்த இளைஞனின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்படவுள்ள நிலையில், இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 வருடங்களின் பின் பேஸ்புக்கால் சிக்கிய பொலிஸ் திருடன்!

Pagetamil

ஏப்ரல் 3 -10 வரை வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு: மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது!

Pagetamil

பிரித்தானியாவின் தடையால் கொதிக்கும் ஜேவிபி அரசு

Pagetamil

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!