எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் யாழ் மாநகரசபையில் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி சமர்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை யாழ் மாநகர முதல்வராக பதவிவகித்த வி.மணிவண்ணன் தரப்பினர் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ் மாநகர முதல்வராக மீண்டும் பதவியேற்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் செயற்பட்ட வி.மணிவண்ணன் தரப்பினர், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு) சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி யாழ் மாவட்டத்தில் சங்கு தரப்பின் 7 சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி முடிவு அறிவிக்கப்படும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
இதேவேளை, அண்மையில் சங்கு அணியில் இணைந்த மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவ கட்சி கிளிநொச்சியில் தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.