கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்கள் பாதுகாப்புக் கோரி மனு

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மாவட்ட அரச அதிபருக்கு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் வழிப்பறி கொள்ளைகள் மற்றும் தாக்குதல்களை கண்டித்த பிரதிநிதிகள், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

அண்மையில்கிளிநொச்சி பூநகரி பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலை அதிபர் பாடசாலை பணிகள் முடிந்து வீடு திரும்பும் போது, பூநகரி சங்குப்பிட்டி வீதியில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

மேலும், நேற்று முன்தினம் (23) கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஒரு ஆசிரியரின் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவமும் அண்மையில் பதிவாகியுள்ளதுடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் சங்கம் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடி, உரிய பாதுகாப்பு பெற்றுதருமாறு கோரியுள்ளனர்.

இவை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சு. முரளிதரன், இந்த சம்பவங்களின் குறித்து பொலிஸாருடன் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்