ஆன்லைன் பணமாற்ற கட்டணம் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

Date:

ஆன்லைனில் பணப்பறிமாற்றம் செய்பவர்களுக்கு மத்திய வங்கியால் முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நிகழ்நிலையில் (Online) பணப்பரிமாற்றம் செய்யும் போது வசூலிக்கப்படும் கூடுதல் வங்கி கட்டணம் ஐந்து ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்தின்படி, இனி ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் போது, ​​பணம் அனுப்பும் கணக்கிலிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ரூபாய் 25 ஆக இருக்கும். இதற்கு முன்னர், குறித்த கட்டணம் ரூபாய் 30 ஆக இருந்தது.

ஆன்லைன் பரிமாற்ற கட்டண குறைப்பை மேற்கொள்ள மத்திய வங்கி சமீபத்திய நாட்களில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியது. தற்போது இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு சற்றே நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்