சீனாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு ரோபோ திடீரென பொதுமக்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில், AIயின் கட்டுப்பாட்டில் இயங்கிய ரோபோ ஒன்று திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்தவுடன், அங்கு இருந்த அதிகாரிகள் உடனடியாக அந்த ரோபோவை கட்டுப்படுத்தியிருந்தாலும், இதனால் குறித்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் பதிவான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அத்துடன், மென்பொருள் கோளாறே இந்த ரோபோவின் ஒழுங்கற்ற செயலுக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த AI ரோபோ தனது ஒபரேட்டரையே தாக்க முற்பட்டதாகவும், இதன்மூலம் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம், AI தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.