Pagetamil
இலங்கை

உழவு இயந்திர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற பரிதாபகரமான விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (24) இரவு, நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதவடி பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!