Pagetamil
இலங்கை

ஹபரணை விநாயகர் ஆலயத்திற்கு ஒரு நியாயம், தையிட்டி விகாரைக்கு ஒரு நியாயமா?

ஹபரணை பகுதியில், பழமையான விநாயகர் ஆலயத்தின் முன்னால் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டதால், ஆலயம் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நடவடிக்கை, ஆலயத்தை அகற்றுவதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது, அனுராதபுரத்தில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இந்து மதத்தையும் அழிக்க முயற்சிக்கும் செயல் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்து கலாசாரத்தின் தொன்மைபீடமாக இருப்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை அகற்ற பல்வேறுபட்ட அரச தரப்புகள் நியாயம் பேசி வரும் நிலையில் இவ்வாறு இந்து ஆலயங்கள் அகற்றப்படுவது பாரபட்சத்தின் உச்ச கட்டம் எனப்படுகின்றது. மேலும், குறித்த விநாயகர் ஆலயம் நியாயமானதாகவும், சட்ட ரீதியாகவும் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் எதிர்ப்பை வெளியிட தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு, மதநிலையங்களை மாற்றுதல் மற்றும் அகற்றுதல் தொடர்பான நடவடிக்கைகள், சமூகத்தில் மத நல்லிணக்கத்தையும், தமிழர் உரிமைகளையும் பாதிக்கக்கூடியதாக உள்ளது.

இதையும் படியுங்கள்

தனது தவறான முடிவால் கொல்லப்பட்டவர்களுக்காக 21 வருடங்களின் பின் முதல்முதலாக அஞ்சலித்த கருணா!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

காவல்துறையில் புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்க முடிவு

Pagetamil

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!