இன்றைய காலை (24) நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்த, பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெறும் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பாதாள குழு சம்பவங்களுடன் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்கள், முன்னைய இராணுவ அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு, குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் உறுதியாக செயல்படுகின்றது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.