இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வைக்கும் ஐந்து கட்சிகள் உட்பட, சி. வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கம், மு. சந்திரகுமாரின் சமத்துவக்கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த ஈ. சரவணபவன் அணி, கே.வி. தவராஜா அணி ஆகியவை இணைந்து சங்கு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளனர்