ஆப்கானிஸ்தானில் இன்று (22) அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாவது நிலநடுக்கம் அதிகாலை 4.20 மணிக்கு 4.5 ரிச்டர் அளவில், 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கம் 4.33 மணிக்கு 4.2 ரிச்டர் அளவில், 150 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கியுள்ளதால், அந்தப் பகுதியின் மக்கள் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தவொரு உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மக்கள் நிலநடுக்கங்களை உணர்ந்து, தங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அரசு மற்றும் மீட்பு குழுக்கள் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.