ஹபரணையில் இந்து ஆலயத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தவரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹபரணையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டு அதற்கிடையில் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்லும் வழியும் மறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தடுப்பு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சமுகத்தினிடையே கடும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையினரின் ஆதிக்க போக்கால் சிறுபான்மையினர் அடக்குமுறைக்குள்ளாகுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.



இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்குமாறு அரசாங்கத்தையும், உள்ளூராட்சி அதிகாரிகளையும் மக்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
இதே சமயம் யாழில் தையிட்டி விகாரை தொடர்பான முரண்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வு பக்கச்சார்பான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.