கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு (21) துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பொத்த வீதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கிராண்ட்பாஸ் பொலிஸாரின் நடவடிக்கையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குற்றவாளிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1