சூரிய குடும்பத்தின் ஏழு கோள்கள் ஒரே நேரத்தில் வானில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரவு வானில் ஏழு கோள்களையும் ஒரே நேரத்தில் கண்டுகளிக்க முடியும் எனவும், இதில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கோள்களை பார்வையிட தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் பார்வைக்கு வரும் எனவும் வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வானியல் ஆர்வலர்கள் இந்த அபூர்வமான நிகழ்வை உறுதியாகக் காணலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்