திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் 19ம் திகதி புதன்கிழமை திருகோணமலை நகரில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொல்லப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, உணவகங்களில் பாவனைக்குத் தகாத உணவுப் பொருட்கள் உள்ளதோடு, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் ஒரே குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்தமை, காலாவதியான பொருட்கள், கடைகளில் சுகாதார குறைபாடுகள் மற்றும் உணவுப் பொருட்களின் லேபல் பற்றிய பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கமைய, சில கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதகமாக இருக்கக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சில கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1