கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.