29.3 C
Jaffna
April 11, 2025
Pagetamil
உலகம்

சுவிஸ்சர்லாந்தின் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடும் நான்கு தமிழர்கள்

சுவிஸ்சர்லாந்தின் சோலோதர்ன் (Solothurn) மாகாணசபைத்தேர்தலில், சோசலிச ஜனநாயகக் கட்சி (SP) சார்பில் நான்கு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், Sathiyaseelan Otten Gösgen, Suntharalingam Domeck-Thierstein, Rasamanickam Olten Gongen, Gana Bucheggberg-Wasseramt ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர்.

இந்நிலையில், குறித்த தேர்தலில் தமிழ் சமூகத்தின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ்சர்லாந்து குடியுரிமை பெற்ற அனைத்து தமிழர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கும் வகையில், Bucheggberg/Wasseramt பிரிவில் போட்டியிடும் Gana Sutha (List 2.09) வேட்பாளருக்கு இரண்டு வாக்குகள் வழங்கலாம். இதேபோல், Olten/Gösgen பகுதியில் Sri Rasamanickam (List 6.19), Sathiyaseelan (List 6.20) ஆகியோருக்கு வாக்களிக்கலாம். Dorneck/Thierstein பிரிவில் Shulojan Suntharalingam (List 5.06) போட்டியிடுகிறார்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் முறையே இரண்டு வாக்குகள் அளித்து வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50000-க்கும் அதிகமான தமிழர்கள் வாழும் சுவிற்சர்லாந்தில், தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியமானது. இதற்காக, ஒவ்வொரு வாக்காளரும் தமது நண்பர்கள் மற்றும் தொழில் தோழர்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்.

வாக்களிப்பதில் சந்தேகம் இருப்பின், வேட்பாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். மேலும், சமூக வலைத்தளங்களில் வேட்பாளர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து, அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். “நாம் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்” என வேட்பாளர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!