அவுஸ்திரேலியாவின் வில்லாச் நகரில் நேற்று (15.02.2025) இனந்தெரியாத நபர் ஒருவரால் வீதியில் நடந்து சென்றவர்களுக்கு சரமாரியாக கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலின்போது, 14 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
குறித்த இந்த தாக்குதல் சுமார் 23 வயதுடைய சந்தேக நபரால் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர் சிரியாவைச் சேர்ந்தவர் என்றும், அவுஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக குடியேறியிருப்பதும் விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் தற்போது அவரது தனிப்பட்ட பின்னணி பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதா? அல்லது வேறு முரண்பாடு காரணமாக ஏற்பட்டதா? என்பது பற்றி அவுஸ்திரேலிய பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



