பாப்பரசர் பிரான்சிஸின் நிலை மோசம்

Date:

நெஞ்சுசளி பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (14) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

88 வயதாகும் பரிசுத்த பாப்பரசர் கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை ஆராதனை நிகழ்விற்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் அவருக்கான தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வத்திக்கான் மருத்துவ அதிகாரிகள் பாப்பரசரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைய நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கான் விரைவில் மேலதிக தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கத்தோலிக்க பக்தர்கள் அவரது உடல்நலத்திற்காக சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்