யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சிந்துபாத்தி மையானத்தில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்ளுவித்துள்ளது.
குறித்த மயானத்நில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.
இதற்கமைய மயானத்திற்குள் கிடங்குகள் வெட்டிய போது இந்த எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த சிந்து பாத்தி மயானத்திற்குள் எரியூட்டி அமைப்பதற்ககாக நல்லூர் பிரதேச சபையினால் ஒப்பந்த கார்களுக்கு வழங்கப்கட்டுள்ளது.
இவ்வாறு எரியூட்டு அமைப்பதற்காக ஓப்பந்த்தார்கள் ஒப்பத்தமொன்று மேற்கொள்ளப்ட்டது. இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காக கிடங்கு வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்டு் உள்ளன.
இதனையடுத்து ஒப்பத்தக்காரரினால் நல்லூர் பிரதேச சபைக்கு இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு
வருகை தந்த பிரதேசசபைச் செயலர் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சிந்து பார்த்தி மயான அபிவிருத்தி பணி6 உறுப்பினர்க்ள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து புனரமைப்பு பணிகளை இறுநிறுத்தாது தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஒப்பந்தகாரர்களுக்கு வலியுறுத்தியிருந்தனர்.
இந் நிலையில் எலும்புகூடுகள் மனித எச்சங்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவ மனித எச்சங்களாக இருக்கலாம் என்ற எனச் சந்தேகித்த ஒப்பந்ததாரர் தம்மால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது எனத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அந்த ஒப்பத்தத்தை இடைநிறுத்திய பிரதேச சபைச் செயலாளர் மயான அபிவிருத்தி சபையிடம் இது குறித்து தெரிவித்ததுடன் குறித்த ஒப்பந்தத்தின் தொடர் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த மயான அபிவிருத்தி குழுவினர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
இதேவேளை அப்பகெதியில் மூன்று குழிகள் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு குழிகளில் ஏலும்புக. ககூட்டு ஏச்சங்கள் கண்டுபிடிக்கப்கட்டதீலேயே ஒப்பந்தகார்ர் இந்த பிகளை நிறுத்தியுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் செம்மனிப் படுகொலையில் கொல்லப்பட்டவர்ளுடைய அல்லது புதைக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடையதாத இருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளிப்படுத்தபடுகின்றன.
இதனாலேயே பலரின் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த எலும்பு கூடுகள் எப்படி எங்கிருத்து வந்தது என்பது தொடர்பில் அச்சத்தில் பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.