கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாமென குறிப்பிட்டு, கோப்பாய் பிரதேசத்தின் சில இடங்களில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த பதாகைகளில், இரண்டு மொழிகளும் தெரிந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்றாதே என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இதில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1