அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாடு

Date:

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் அரசு முக்கிய கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் பெருமளவில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், சந்தையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வதை தடுப்பதற்கும் அரசு உறுதியாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில், உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக கூடினார்கள்.

இந்த கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முக்கிய கொள்கை தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டத்தோடு, நெல் கொள்வனவுடன் தொடர்புடைய விடயங்களும் விரிவாக பேசப்பட்டன.

நெல் கொள்வனவுக்காக ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ், கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவை கண்காணிக்க வேண்டிய அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. லங்கா சதோச நிறுவனம் சமீபத்தில், நாட்டின் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள், புத்தாண்டு காலத்தில் மக்கள் அதிக விலையின்றி தேவையான பொருட்களைப் பெற முடியுமென்பதை உறுதிப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person)...

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில்...

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்