Pagetamil
கிழக்கு

தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர்-8 அல்மினன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய முஹமட் அன்சார் முகமட் ஆசாத் என்ற இளைஞனே சம்பவ இடத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மரணமடைந்த இளைஞன் கடற்தொழில் மேற்கொள்பவர் என்பதுடன் 11 பேர் கொண்ட குடும்பத்தில் முதலாவது பிள்ளையாவார்.

இன்று விடுமுறை தினமாகையினால் தேங்காய் பறிப்பதற்கு சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.அத்துடன் உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் போது தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது கால் வழுக்கி சுவரில் விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

மேலும் குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!

Pagetamil

இரு பெண்கள் வெட்டுக்காயத்துடன் சடலங்களாக மீட்பு!

Pagetamil

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் போர்க்கொடி

Pagetamil

Leave a Comment